தஞ்சாவூர் அருகே மணல் கடத்திய வாலிபர் சிக்கினார்

75பார்த்தது
தஞ்சாவூர் அருகே மணல் கடத்திய வாலிபர் சிக்கினார்
தஞ்சாவூர் அருகே மணல் கடத்திய வாலிபர் சிக்கினார். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே கூடலூர் வடகரைப் பகுதியில் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே மினி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் மினி லாரியை நிறுத்திவிட்டு அதிலிருந்து 3 பேர் தப்பியோடினர்.
லாரியில் இருந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கி கொண்டார். பின்னர் போலீசார் மினிலாரியை சோதனை செய்தபோது அதில் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரி டம் விசாரித்த போது அவர் கூடலூர் காலனி தெருவை சேர்ந்த மணிகண்டன் (21) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி