தஞ்சாவூர் காந்திஜி சாலை விரிவாக்கத்தின்போது ஆற்றுப்பாலத்தில் இருந்து அகற்றப்பட்ட பேருந்து நிறுத்ததை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் இடையில் காந்திஜி சாலையில் ஆற்றுப்பாலதில் பேருந்து நிறுத்தம் உள்ளது. எல்ஐசி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் இந்த பேருந்து நிறுத்தத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கத்துக்காக இங்கிருந்த பேருந்து நிறுத்தம் அறைப்பட்டது. ஆனால், பணிகள் முடிவடைந்தும் அந்த இடத்தில் இன்னும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை. இதனால் மழை மற்றும் வெயிலில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பேருந்து நிறுத்தம் இல்லாத காரணதால் ஒரு சில பேருந்துகளின் ஓட்டுநர்கள் அந்த இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். எனவே அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.