தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகளை தஞ்சையில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் நடிகர் சந்திரசேகர் வழங்கினார். எம்பி முரசொலி, எம்எல்ஏ மேயர் சண் ராமநாதன், டிஆர்ஓ தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் நடிகர் சந்திரசேகர் தலைமை வகித்து தஞ்சை மாவட்டத்தில் 5 கலைஞர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் நலத்திட்ட உதவித் தொகை ரூ. 6 ஆயிரம், 10 கலைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 20 ஆயிரத்து 290, 3 பேருக்கு திருமண உதவித் தொகை ரூ. 15 ஆயிரம், 2 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நலத்திட்ட உதவிகள் தொகை ரூ. 50 ஆயிரம் என்று மொத்தம் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 250ஐ வழங்கினார். சிறந்த நூலாசிரியர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் 2 ஆசிரியர்களுக்கும், கலைமாமணி விருது பெற்று நலிவுற்ற நிலையில் வாழும் ஒரு கலைஞருக்கு ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.