சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்திய, அரசியல் சாசனத்தை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம். எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் டி. கண்ணையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிபிஐ மாநகரச் செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், சிபிஐ (எம். எல்) லிபரேசன் மாநகரச் செயலாளர் எஸ். எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சி. ஜெயபால், கே. அருளரசன்,
ஆர். கலைச்செல்வி, என். சரவணன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசி வரும் அமித்ஷாவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.