மத்திய பட்ஜெட்டை கண்டித்து பட்டுக்கோட்டை திமுக ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில், பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா. அசோக்குமார் முன்னிலை வகித்தார்.  
ஆர்ப்பாட்டத்தில், "மெட்ரோ ரயில் திட்டம் நிதி என்னாச்சு, ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதே, வரி என்றால் இனிக்குது, நிதி என்றால் கசக்குதா, ஒதுக்கிடு, ஒதுக்கிடு, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கிடு, டெல்லியில் கிண்டிய அல்வாவை, தமிழ்நாட்டில் ஊட்டாதே, ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம், ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இவ்வாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர்கள்,
நகரச் செயலாளர்கள்
உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பட்டுக்கோட்டை நகர செயலாளர் எஸ். ஆர். என். செந்தில்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி