பட்டுக்கோட்டையில் 10 ஆம்தேதி நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
பட்டுகோட்டை நகராட்சி நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10ம்தேதி (செவ்வாய்க்கி ழமை) மாலை 4 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நகராட்சியால் வழங்கப்பட்டு வரும் சேவைகள் சம்பந்தமான புகார்கள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் இந்த நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நகராட்சி சேவைகள் சம்பந்தமான தங்களது கருத்துக்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.