தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப்
பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. முகாமில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பை பட்டுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இதற்கான நிறைவு விழா பள்ளி தலைமை ஆசி ரியர் கருணாகரன் தலைமையில் நடந்தது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரங்கசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திராவிட செல்வன் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினார்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் அருண்குமார் செய்து இருந்தார். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.