பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நவீன மடக்கு கட்டில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் பேராவூரணி பெருந்தலைவர் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு, ரோட்டரி சங்க உறுப்பினர்
என். கௌதமன் நிதி உதவியில், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான நவீன மடக்கு கட்டில் மற்றும் முதியோர்களுக்கான 100 டயபர் ஆகியவை மருத்துவர் ராமசாமியிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் துணை ஆளுநர் ரமேஷ் முன்னிலை வகித்தார். செயலர் ஆர். செந்தில்குமார், பொருளாளர் ராகவன், நிர்வாகிகள் டாக்டர் முத்துக்குமார், எஸ். நாகராஜன், என். கௌதமன், அபிராமி
ஏ. சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.