பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட தலைவர் பகத்முகமது, செயலாளர் ஜலீர்முஹைதீன், பொருளாளர் சுதாகர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு முறிவு மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பகத்முகமது கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பணிஇடம் காலியாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளஅட்டை உட்பட எந்தவிதப் பலன்களும் கிடைக்கவில்லை.
இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் அந்தக் காலிப்பணியிடத்தை நிரப்பாவிடில் வரும் ஜனவரி 6ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றுசேர்ந்து முற்றுகைப்போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.