தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலயத்தில்,
4 ஆவது, அகில உலக தாத்தா-பாட்டிகள் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலயத்தில் காலை முதல் தியான வகுப்புகள் நடத்தப்பட்டு, மாலை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தாத்தா- பாட்டிகளுக்கு அவர்களது பேரன், பேத்திகள், குடும்ப உறுப்பினர்கள் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தாத்தா -பாட்டிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனல்வாசல் புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஜான்சன் எட்வர்ட், உதவித் தந்தை அந்தோணி பெர்டினான்டோ, அருட் சகோதரிகள் புனல்வாசல் பங்கு மக்கள் செய்திருந்தனர்.