தஞ்சாவூர் மாவட்ட அளவிலான
56 ஆவது குடியரசு தின தடகளப்போட்டிகள் அக். 5, 6 இரு நாட்கள் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ. மாணவிகள் பங்கேற்றனர். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் எஸ். சிவஹரிஸ் 200 மீட்டர் ஓட்டம், 400மீட்டர் ஓட்டம் மற்றும் 600 மீட்டர் ஓட்டம் மூன்றிலும் முதலிடம் பிடித்த தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவர்
எம். கணேசமூர்த்தி 400மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடமும் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வி. சிவனேசன் 1, 500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடமும், 3, 000 மீட்டர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாணவிகளுக்கான 17 வயது பிரிவில் கே. காயத்திரி 3, 000 மீட்டர் ஓட்டப்போட்டியில் மூன்றாம் இடமும், ஏ. அபிநயா 400 தடைதாண்டி ஓடும் போட்டியில் மூன்றாம் இடமும், 4×400 தொடரோட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் வீ. மனோகரன் பாராட்டினார்.