தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் எஸ். இ. டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 16 ஆம் ஆண்டு விழா, உணவுத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் லெ. கோவிந்தராசு தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் குழு உறுப்பினர் அசோகன், பள்ளி தாளாளர் சித்திரா கோவிந்தராசு, பள்ளி முதல்வர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் இராஜதுரை வரவேற்றார். முதுகலை வேதியியல் ஆசிரியர் அடைக்கலம் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர்
சி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார்.
உணவுத் திருவிழாவில் மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவு வகைகளை தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை பள்ளியின் தமிழாசிரியர் பாரதி குகன், முதுகலை ஆங்கில ஆசிரியர் சக்திகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியார்கள் எம். ஆர். திரவியம், இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.