தஞ்சாவூர் அருகே வல்லம் ரம்யா சத்தியநாதன் சிபிஎஸ்இ பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையேயான கபடி போட்டி நடந்தது.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 3 நிலைகளில் போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ், துணை முதல்வர் சரண்யா, உடற் கல்வி இயக்குநர் முத்துராஜன் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தினர். 12
வயதுக்கு உட்பட்டோர் போட்டியின் முடிவில் சவுமா பப்ளிக் பள்ளி, தூய இதய பன்னாட்டுப்பள்ளி, அரபிந்தோ சிபிஎஸ்இ பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களில் வென்றன.
ரம்யா சத்தியநாதன் வித்யாஷ்ரம் பள்ளி நான்காம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளை ரம்யா சத்யநாதன் கல்விக்குழும தலைவர் சத்யநாதன், செயலர் ஜெனரேரம்யா ஆகியோர் பாராட்டினார். மற்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.