பட்டுக்கோட்டை: கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல்; ஆட்சியரிடம் புகார்

76பார்த்தது
பட்டுக்கோட்டை: கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல்; ஆட்சியரிடம் புகார்
பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அம்பிகா, தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: - நான் எனது கணவரை பிரிந்து மகன், தந்தையுடன் வசித்து வருகிறேன். நான் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கினேன். அதை திருப்பிக் கொடுத்துவிட்டேன். 

அப்போது கடன் கொடுத்தவர்கள் வேறு யாராவது கடன் கேட்கும் நபரை அறிமுகம் செய்து வையுங்கள் என கூறினர். அதன்படி நான் சிலரை அறிமுகம் செய்து வைத்தேன். அதன்படி அவர்கள் கடன் வாங்கினர். ஆனால் அவர்கள் வட்டி கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் என்னிடம் பணத்தை கேட்டு தகராறு செய்து வருகிறார்கள். அவர்கள் வாங்கிய பணத்திற்காக நான் ரூ. 18 லட்சம் கொடுத்துள்ளேன். இருப்பினும் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள். 

மேலும் எனது வீட்டை பூட்டி அபகரித்துக்கொண்டு வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்துச்சென்றுவிட்டனர். பணத்தை கொடுக்காவிட்டால் என்னையும், எனது மகன், எனது தந்தை, எனது தோழியையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள். இது குறித்து போலீசில் புகார் செய்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி