பட்டுக்கோட்டையில் புதன்கிழமை தாயும் அவரது 10 வயது மகளும் சடலமாக மீட்சப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் கரிக்காடு பாரதி சாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமநாதன் (45), அவரது மனைவி காளீஸ்வரி (35). மகள் நிவ்யதர்ஷினி (10), பட்டுக்கோட்டையில்
ராமநாதன் தேநீர்க் கடை நடத்திவந்த நிலையில், கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் தேநீர்க் கடை நடத்திவந்தாராம். கடன் தொடர்பாக அவரது மனைவிக்கு நெருக்கடி இருந்துவந்ததாம். இந்நிலையில், அண்மையில் ஊருக்கு வந்த ராமநாதனுக்கும், காளீஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு ராமநாதன் சென்ற நிலையில், அவரது வீட்டின் கதவு புதன்கிழமை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை நகரக் காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காளீஸ்வரி தூக்கிட்ட நிலையிலும், அவரதுமகள் விஷம் குடித்து உயிரிழந்த நிலையிலும் சடலமாகக் கிடந்தனர். இதையடுத்து, இருவரின் சடலங்களையும் போலீஸார் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.