வெயில் தாக்கத்தால் இறந்து கரை ஒதுங்கும் சங்குகள்

74பார்த்தது
வெயில் தாக்கத்தால் இறந்து கரை ஒதுங்கும் சங்குகள்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோரப் பகுதியில் வெயில் தாக்கத்தால் கூட்டம் கூட்டமாக நத்தை இனத்தைச் சேர்ந்த சங்குகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் மனிதர்கள் கால்நடைகள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோடை மழை இல்லாததால் வறட்சியான சூழ்நிலை உள்ளது. கிராமப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் கடல் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது அப்பகுதியில் அலையாத்தி காடுகள் இருப்பதால் இறால் உற்பத்தி அதிக அளவில் காணப்படும். தற்போது வெயில் அதிக அளவில் காணப்படுவதால் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் சங்குகள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்குகிறது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில் இவ்வகை சங்குகள், சேற்று பகுதியில் அதிகம் காணப்படும். மீனவர்கள் வலையிலோ கையிலோ சிக்கினால் அவற்றை கடலிலேயே விட்டுவிடுவார்கள். இந்த வகை சங்குகள் தண்ணீரை விட்டு வெளியே வந்தால் இறந்து விடும். வெயில் தாக்கத்தால் சங்குகள் கொத்து கொத்தாக இறக்கிறது" இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி