தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (பிப்ரவரி 06) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
ஏனாதி ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய தொடக்கப்பள்ளி, கார்காவயல் ஊராட்சி பி. வி. என். திருமண மண்டபம், துவரங்குறிச்சி ஊராட்சி முத்து மாரியம்மன் கோவில் வளாகம், தாமரங்கோட்டை வடக்கு ஊராட்சியின் கிராம இ-சேவை மையக் கட்டிடம், தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சியின் சமுதாயக்கூடம் ஆகிய 5 இடங்களில் நடக்கிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.