பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து காசாங்குளம் கீழ்கரையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா ஆகியோர் தலைமை தாங்கினர். விழா கொடியினை விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஏற்றி வைத்து பேசினார்.