தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 65) இவர் அதிராம்பட்டினம் சேதுரோட்டில் தனியார் பால் நிறுவனத்தின் முகவராக கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், பால் வாங்குவதைப் போல் நடித்து கடையிலிருந்த ஸ்மார்ட் போனை திருடி சென்றுவிட்டார். செல்போன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைத்த நாடிமுத்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவையாறில் அந்த ஸ்மார்ட் போனின் சிக்னல் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் போனை வைத்திருந்த நபரை கண்டுபிடித்தனர். மேலும் செல்போனை வைத்திருந்த நபரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து செல்போனை மீட்டனர். , தொடர்ந்து செல்போன் பறிகொடுத்த நாடிமுத்துவை காவல் நிலையத்துக்கு அழைத்து அவரிடம் மீட்கப்பட்ட ஸ்மார்ட் போனை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஒப்படைத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், போலீஸ்காரர் பிலால் முகம்மது ஆகியோர் இருந்தனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் தொலைந்துபோன சுமார் ரூ. 3லட்சம் மதிப்பிலான 17 ஸ்மார்ட் போன்களை அதிராம்பட்டினம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.