பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 7. 50 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை ஆலடிக்குமுளை ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.