தஞ்சாவூர்: விபத்தை தடுக்க தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை

53பார்த்தது
தஞ்சாவூர்: விபத்தை தடுக்க தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டை
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால் வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் அவற்றுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டதா என கண்டறியவும், அவற்றால் விபத்துகள் நேரிடாமல் தடுக்கவும், தெரு நாய்களின் கழுத்தில் அணிவிக்கப்பட உள்ள ஒளிரும் பட்டைநாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகள் அணிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் கூறியது: இதுவரை 3 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்பட்டுள்ளன. சாலையில் திரியும் நாய்கள், கருத்தடை செய்யப்பட்டதா, இல்லையா என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. நாய்கள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு கழுத்தில் ஒளிரும் பட்டை அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி