பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு மதுக்கூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் லண்டன் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். முகாமை மதுக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முகிலன் வரவேற்றார். முகாமில் திமுக பொதுக் குழு உறுப்பினர் ஆலத்தூர் ரூஸ்வெல்ட், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்
செல்வநாயகி,
ஒன்றியக்குழு உறுப்பினர் கைலாசம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் மெய்யநாதன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தலைவர் கலைச்செல்வன், செயலாளர் செந்தில் பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆலத்தூர் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் திருமக்கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 421பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்காக 124 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.