பாபநாசம் ரோட்டரி சங்க சாசனத்தலைவர் கே அமீர்ஜான் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி ஆளுநர் வெங்கடேசன், முன்னாள் தலைவர் சரவணன், முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு
கொசுவலை,
போர்வை, மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கினார்கள். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்தவர்களுக்கும் உள் நோயாளிகளுக்கும் பிரட், கபசுர குடிநீர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் முருகவேல், பொருளாளர் ரவிச்சந்திரன்,
முன்னாள் தலைவர்கள்
அன்பழகன், செந்தில்நாதன், பக்ருதின், முருகானந்தம், அறிவழகன், சுப்ரமணியன் உட்பட
ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.