அய்யம்பேட்டை அருகே காசநோய் கண்டறியும் முகாம்

53பார்த்தது
அய்யம்பேட்டை அருகே காசநோய் கண்டறியும் முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி, புத்துார் ஊராட்சி வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவக்குழுவின் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியால் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. முகாமை முன்னாள் ஊராட்சித்தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் குலசேகரபாண்டியன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தெய்வீகன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ராஜேஷ், டெக்னீஷியன் கார்த்திகேயன், மருத்துவப்பணியாளர் ரேணுகா உட்பட முகாமில் கலந்து கொண்டனர். ஊராட்சிச்செயலர் முருகையன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி