தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துபாய்அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாடு வாழ் பெண்கள் அமைப்பு சங்கம் நடத்தும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பாபநாசம் ஒன்றிய தலைமை
ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் ஒன்றிய தலைவர் குமார் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வீரமாங்குடி கிளை தலைவர் நீலகண்டன் , துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரஜினி கணேசன் கலந்துகொண்டு பள்ளி வளாகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, பிரதீஷ், ராஜேஸ்வரி , வாசுகி, தேன்மொழி மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள்
அருள்மொழி , பாபநாசம் கிளை தலைவர் பாண்டியராஜ், வீரமாங்குடி சக்திவேல், இலுப்பக்கரை பாண்டியன் , கருப்பூர் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் நகரச் செயலாளர் பீர் முகமது நன்றி கூறினார்.