பாபநாசம்: டிராக்டர் திருடியவர் அதிரடி கைது

70பார்த்தது
பாபநாசம் தெப்பக்குளத் தெருவில் வசித்து வருபவர் சுதாகர் வயது 44. இவருக்குச் சொந்தமான ரூ.7 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து சுதாகர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெகஜீவன், கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினருடன் டிராக்டரை திருடிய திருடனைத் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சோதனை செய்தபோது டிராக்டரை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

தொடர் விசாரணையில் இங்கிருந்து டிராக்டரை திருடிக் கொண்டு பண்ருட்டிக்குத் திருடிச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கீழ்யிருப்பு தகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 60 என்பவர் டிராக்டரை திருடியது தெரியவந்தது. திருடிய டிராக்டரை புதிதாகப் பெயிண்ட் அடித்து மாற்றி வைத்திருந்தார்.

பின்னர் பாபநாசம் போலீசார் டிராக்டரை திருடிய தமிழ்ச்செல்வனைக் கைது செய்து டிராக்டரைப் பறிமுதல் செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அப்துல் கனி தமிழ்ச்செல்வனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்தத் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி