தார் சாலை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் அவலம்

4435பார்த்தது
தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் பாபநாசம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட சாலையில் பல இடங்களில் தார் கலவை பெயர்ந்து வருகிறது. சேதமடைந்த தார் சாலைப்பகுதிகள் 3வது முறையாக பேட்ச் ஒர்க் பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தரமின்றி, தார் கலவை சரியான அளவில் சேர்க்காததால் தார் சாலை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும். அவலநிலை ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி