பாபநாசத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கின்ற வங்கிகளில் நகை கடன் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கைகளில் தேசியக்கொடி ஏந்தி கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர விமல்நாதன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் , வங்கிகளில் நகை கடன் பெறுவதற்கு நகை வாங்கிய அசல் ரசிதை ஒப்படைக்க வேண்டும் என்கின்ற விதியை விளக்கிக் கொள்ள வேண்டும் எனவும்,
ஏற்கனவே நகை கடன் வாங்கி இருந்தால் அதை முழுமையாக திருப்பி செலுத்தினால் மட்டுமே புதிய நகை கடன் வழங்கப்படும் என்ற விதி ஏற்புடையதல்ல எனவும்,
நகையின் மதிப்பில் 80 சதவீதம் கடன் தொகை வழங்கப்படுகின்ற தற்பொழுது உள்ள நடைமுறையை 75 சதவீதமாக குறைப்பது ஏற்க இயலாது எனவும்,
22 கேரட் நகை மட்டுமே கடன் வழங்கப்படும் என்கிற நிபந்தனை
நியாயமற்றதாகவும்,
மேலும் இந்திய அரசு இவ்வாறான கொள்கை முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக பயனாளிகளான பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு கொள்கை முடிவது அறிவிக்க வேண்டும் உருப்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.