தஞ்சை: சீனிவாசபெருமாள் திருக்கோயில் அறங்காவலர் குழு தேர்வு

53பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சன்னதி தெருவில் அமைந்துள்ள சீனிவாச திருக்கோவில் பெருமாள் திருக்கோயில் அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சொரிமுத்து, பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் விக்னேஷ், ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கோயிலின் அறங்காவலர்களாக செந்தில், சதீஷ், சீதாலட்சுமி ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

பின்னர் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக செந்தில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு உதவி ஆணையர் கோயில் செயல் அலுவலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி சரவணன், பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், திரளான பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி