புரசக்குடி காமாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

62பார்த்தது
புரசக்குடி காமாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
பாபநாசம் தாலுகா, புரசக்குடி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன், சூலபிடாரி அம்மன் ஆலயங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது  முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து மூலவர் கோபுர கலங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புரசக்குடி கிராம வாசிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி