எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
அய்யம்பேட்டையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு.

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். ஆண்கள், பெண்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டையில் பாபர் மசூதி 32-ஆம் ஆண்டு இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இழந்த மசூதியை மீட்டெடுப்போம் எனவும், அநீதியை எதிர்த்து போராடுவோம், வேற்றுமையில் ஒற்றுமை காக்க ஒன்றுபடுவோம், பாசிச எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும் போன்ற கோஷங்கள் இட்டவாறு கைகளில் கொடிகளை ஏந்திய வண்ணம் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி