விவசாயிகளின்வாழ்க்கையை சொல்லும் பரமன் பொதுமக்கள் விமர்சனம்

60பார்த்தது
இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜே. சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பரமன்' விவசாயிகளின் வாழ் வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் 'பரமன்' ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்கிறார். வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி, இசை. சிபி சதாசிவம், ஒளிப்பதிவு. படத்தொகுப்பு, இயக்குநர் சபரிஷ். கதை, இதய நிலவன். தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த 'பரமன்' படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார், இப்படம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்தி சினிமாஸ் திரையரங்கில் வெளியானது படம் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் 'விவசா யத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதால் ஒரு சிறு விவசாயி தனது நிலத்தை மீட்க படும் சிரமங்களை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ளார் மேலும் நிலத்தை மீட்க முடியாமல் படத்தின் முடிவில் அனைத்தையும் இழந்து விவசாயி இறப்பது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க படம் பரமன்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி