தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் சுந்தர விமல்நாதன் தலைமை தாங்கினார். காவிரி சமவெளி மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்காமல் இரட்டிப்பாக்க வேண்டும், குத்தகை உழவர்களுக்கும் இந்த சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி கைகளில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் நரசிம்மபுரம் செந்தில், மருத்துவக்குடி முருகேசன், ஆதனூர் திருஞானம், மேலசெம்மங்குடி சின்னதுரை, மதகரம் வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.