பாபநாசம் தொகுதி பி. எல். ஏ 2, பி. எல். சி நிர்வாகிகள் கூட்டம்

558பார்த்தது
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாபநாசம் தொகுதி
பி. எல். ஏ 2 மற்றும் பி. எல். சி நிர்வாகிகள் கூட்டம் உடையார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் தொகுதி பார்வையாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தொமுச பேரவையின் பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி. ஒன்றிய பெருந்தலைவர்கள் கலைச்செல்வன்,
சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை (வ) ஒன்றிய செயலாளர் தியாக. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தஞ்சை (வ) மாவட்ட கழக செயலாளர் கல்யாண சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். இதில் குடந்தை ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர்,
அம்மாபேட்டை (தெ) ஒன்றிய செயலாளர் பி. எஸ். குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  
கூட்டத்தில் கழக தலைவர் பிறந்தநாள் விழா, நாடாளுமன்ற தேர்தல் பணி சம்பந்தமாகவும், இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை சம்பந்தமாக, பி. எல். எ 2 மற்றும் பி எல் சி பணிகள் மற்றும் குடும்ப வாரியாக ஓஎம்ஆர் சீட்டு மற்றும் பி எல் சி கையேடு பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. இதில் பேரூர் கழக செயலாளர்கள் துளசி அய்யா, சீனு, தியாக. ரமேஷ், கபிலன், பாலசுப்பிரமணியம் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி