பாபநாசம் சட்டமன்ற தொகுதி பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-24 இல் ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா பயனாளிகளுக்கு குடிமைப் பொருள்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் இ.ஆ.ப., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விஜயலட்சுமி, முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கோ. தாமரைச்செல்வன், மமக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோவி அய்யாராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என். நாசர், பாபநாசம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.