மேலசெம்மங்குடி தூய்மைப் பணியாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

51பார்த்தது
மேலசெம்மங்குடி தூய்மைப் பணியாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மேலசெம்மங்குடி ஊராட்சியில்  தூய்மைபணியாளராக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அதில்
மேல செம்மங்குடி ஊராட்சியில் 
 8 ஆண்டுகளாக தூய்மை பணி காவலராக பணிபுரிந்து வந்த புவனேஸ்வரி ஆகிய என்னை பணி நிரந்தரம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் ரூபாய் 50, ஆயிரம் கேட்டதாக ஊராட்சி செயலர் என்னிடம் பணம் கேட்டார். என்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்பதால்
எனக்கு 11 மாதம் சம்பளம் வழங்கவில்லை எனவும் அதோடு தன்னை பணியிலிருந்து நீக்கி விட்டதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி