அம்மாப்பேட்டை சந்தைப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே. வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து அம்மாப்பேட்டை கரீம் நகரை சேர்ந்த சுடலைமுத்து (வயது37) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுடலைமுத்துவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 240, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.