நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

57பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடை வீதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பாபநாசம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாலாஜி தலைமை வைகித்தார். காங்கிரஸ் கட்சி  பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு மாநிலத் தலைவரும், பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவருமான பூபதி ராஜா கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர்  தர்பூசணி குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் சித்தார்த்தன், இளைஞரணி தலைவர் வினோத், வர்த்தக அணி தலைவர் சுரேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி