கோபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.29.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் சார் ஆட்சியர் செல்வி. ஹிருத்யா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி. அய்யாராசு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.