அய்யம்பேட்டை பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த காந்தி மகன் கரன் (25). தஞ்சாவூர், கீழவாசல், பூமான் ராவத்தன் கோயில் தெருவை சேர்ந்த குமார் மகன் கட்டை (என்கிற) கதிர்வேல் (23).
தற்போது நியூடவுன் அய்யம்பேட்டையில் வசித்து வருகிறார்.
மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4-பேர்
நேற்று மதியம் 2 மணிக்கு வடக்குமாங்குடி பைபாஸ் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீசாரை சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், இவர்கள் நான்கு பேரும் மினி பேருந்து ஓட்டுனர் சிவமணிகண்டன் (28)கொலை செய்யப்பட்டதற்கு கொலைக்கு சதி திட்டம் தீட்டி, கொலைக்கு உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து. அவர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனம் மற்றும் கைபேசியை பறிமுதல் செய்த போலீசார். மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17-வயது சிறுவனை தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளும் மற்ற மூன்று நபர்களை புதுக்கோட்டை சிறையிலும் அடைத்தனர். தொடர்ந்து கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அய்யம்பேட்டை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுந்தரேசன் அய்யம்பேட்டை வெள்ளாசெட்டி தெருவை சேர்ந்த எடுத்துகாரத்தெருவை சேர்ந்த ராகுல் பரமேஸ்வரன் 3-பேர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.