இடமில்லாமல் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்.

873பார்த்தது
இடமில்லாமல் சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை  பகுதியில்  சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த  உலர் களம் வசதி இல்லை 
அரசு கொள்முதல் நிலையத்தில்  போதுமான  இடவசதியோ அல்லது களம் வசதியோ  இல்லாததால்  விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள கிராமசாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர். சாலையில் நெல் உலர்த்துவதால் கிராமத்தில் 
வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதோடு நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி