தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி முகாம் நடைபெற்றது. அப்போது காணியாளர் தெரு, வாத்தலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, தெற்கு ராஜ வீதி உட்பட அனைத்து தெருக்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இப்பகுதியில் தேங்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உடனுக்குடன் கம்போஸ் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணியை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தூய்மை செய்யப்பட்டு தூய்மையான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியினை பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் நேரில் பார்வையிட்டனர். ஆய்வின் போது பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.