மூடிக் கிடக்கும் கூட்டுறவு வங்கிகள்- விவசாயிகள் பாதிப்பு

357பார்த்தது
மூடிக் கிடக்கும் கூட்டுறவு வங்கிகள்- விவசாயிகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் வங்கிகள் ஒரு வார காலமாக மூடிய நிலையில் பயிர்க்கடன், நகைக்கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை  மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் சங்க செயலாளர்கள், உதவி செயலாளர்கள், எழுத்தர்கள், உரம் விற்பனையாளர்கள் என அனைத்து பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தப் போராட்டம்  தொடர்ந்து  நீடித்து வருகிறது. இதனால் உரம் வாங்க முடியாமலும், நகைக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்டவற்றை பெற முடியாமலும், மற்ற வங்கிக் கடன்களுக்கான தடையில்லா சான்று பெற முடியாமலும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து கூட்டுறவு வங்கிகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி