பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

59பார்த்தது
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மாவட்ட கல்வி அலுவலர் சாரதி பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் வரவேற்று பேசினார். விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். 

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கௌரவ தலைவர் தி. ம. நாகராஜன், நூற்றாண்டு மலரை வெளியிட்டார். நமக்கு நாமே திட்டத்தில் இணைந்து நூற்றாண்டு விழா நினைவு வளைவு கட்ட ரூ. 2 லட்சத்திற்கு காசோலையை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செல்வ முத்து குமார், அமெரிக்கா பணிபுரியும் ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர். முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

விழாவில் மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கெஜலட்சுமி, பாலகிருஷ்ணன், பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி முதுகலை தமிழாசிரியர் காந்தி பள்ளி கடந்து வந்த பாதை குறித்து வாசித்தார், முதுகலை ஆசிரியர் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி தமிழ் ஆசிரியர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பழைய பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் முதுகலை ஆசிரியர் பெர்னாட்ஷா நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி