கபிஸ்தலம் காவல் சரகம் வீரமாங்குடி கிராமத்தில் தகவலின் பேரில் நேற்று வீரமாங்குடி மடம் ரோடு தங்கையன் என்பவரின் வீட்டின் அருகில் கஞ்சாவை விற்பனைக்காக 10 கிராம் அளவுள்ள சிறிய பொட்டலங்களாக போட்டு கொண்டிருந்த சௌந்தர்ராஜன், 25, த /பெ வரதராஜன், கீழத்தெரு, வீரமாங்குடி மற்றும் முத்துகுமார், 24, த/பெ பழனி, கருப்புசாமி கோயில் தெரு, வீரமாங்குடி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் சென்னையிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கே விற்பனை செய்வது தெரிந்து அவர்களிடமிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.