கபிஸ்தலத்தில் பெரியார் சேவை மையம் சார்பில் ரத்ததான முகாம்

683பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெரியார் சேவை மையம் சார்பில் பகுத்தறிவாளர் கழக  மூத்த தலைவர் மறைந்த தி. கணேசன் நினைவு குருதி கொடை வழங்கும் விழா(ரத்ததானமுகாம்) நடைபெற்றது.
விழாவிற்கு பெரியார் சேவை மைய தலைவர் நா. குணசேகரன் தலைமை வகித்தார், பள்ளி தாளாளர் சு. கலியமூர்த்தி, தலைமை அறங்காவலர் க. கலியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அமைப்பை சார்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடமிருந்து இரத்தம் பெற்றனர். நிகழ்ச்சியில் சமுதாய நல கல்வி அறக்கட்டளை அறங்காவலர் க. திருஞானசம்பந்தம், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சி. செல்வகுமார், பள்ளி முதல்வர் க. முருகானந்தம், கபிஸ்தலம் அறிவு திருக்கோயில் ஆ. யோகானந்த் மற்றும்  அமைப்பின் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி, லயன் சங்க நிர்வாகிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரியார் சேவை மையம் கு. இளவரசன் வரவேற்றார், நிறைவில் முகாம் பொறுப்பாளர் ந. விஜயராஜன் நன்றி கூறினார், முகாமை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன் ஒருங்கிணைத்தார். முகாமில் ரத்தம் வழங்கிய ரத்தக் கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி