மகாராஷ்டிரா மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பாபநாசத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்
பாபநாசம், நவ. 24-
மகாராஷ்டிரா மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் பாஜக மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி வில்சன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பாரத் மாதாகீ ஜே, பிரதமர் மோடி வாழ்க என கோஷமிட்டு வெற்றியை கொண்டாடினர். இந்நிகழ்வில் பாபநாசம் பேரூராட்சி 11 வது வார்டு உறுப்பினர் விஜயா கணேசன், ஒன்றிய மாணவரணி சுரேஷ்குமார், குட்டி என்கிற பிரகாஷ், மற்றும் பாஜகவை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.