கும்பகோணம் அருகே அசூரில் இருந்து ஆண்டுதோறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமிக்கு பால்குட காவடி எடுத்து வருவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் 58ம் ஆண்டு பால்குட காவடி புறப்பாடு நடைபெற்றது. அசூர் ஸ்ரீ சுந்தரவல்லி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி, வேல்காவடி எடுத்து பாலக்கரை, மேலக்காவிரி, கொட்டையூர், பாபுராஜபுரம் வழியாக சுவாமிமலை கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.