தஞ்சை: மரம் அரவை மில் உரிமம் உடனே வழங்க வேண்டி கோரிக்கை
தஞ்சாவூரில் தமிழ்நாடு மர வணிகர்கள் மற்றும் ஷா மில் உரிமையா ளர்கள் கூட்டமைப்பின் 42வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கவுரவ தலைவர் பாண்டியன், தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் ராமச்சந்திர ராஜா, தஞ்சாவூர் மாவட்ட தலைவரும் ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளருமான முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மரம் அரவை மில் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தற்போது மரம் அரவை மில் நடத்த உரிமம் கிடைப்பதில் சில பிரச்சினைகள் உள்ளது. இதேப் போல் புதுப்பிப்பதிலும் பிரச்சினைகள் உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து மரம் அரவை மில் நடத்துவதற்கான உரிமத்தை உடனே வழங்க வேண்டும். மர வியாபாரத்திற்கு மட்டுமின்றி பல்வேறு வியாபாரத்துக்கும் ஜி. எஸ். டி. வரியில் பிரச்சினைகள் உள்ளது. ஜி. எஸ். டி வரியை எளிமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோரிக்கைகள் குறித்து விரைவில் தமிழக முதல்வரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. என்று வலியுறுத்தப்பட்டது தஞ்சாவூர் செயலாளர் காந்திலால், கும்ப கோணம் செயலாளர் சிவக்குமார், பட்டுக்கோட்டை செயலாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்ட மர வணிகர்கள், வாள்பட்டறை உரிமையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.