ஒரத்தநாடு - Orathanadu

தஞ்சை: காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இருவர் மீது வழக்கு

தஞ்சை: காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இருவர் மீது வழக்கு

தஞ்சை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு வேகத்தடை அருகே ஒரத்தநாடு காவல்துறை ஆய்வாளர் சுதா, உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், உமாபதி, சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை நிறுத்தி, சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆவணங்களை தர முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளுக்கான உரிய ஆவணங்களை கொடுக்காமல், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக தென்னமநாட்டைச் சேர்ந்த பாலகணேஷ், பழனி ஆகிய 2 பேர் பேர் மீது ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా